Tamil Cinema News | சினிமா செய்திகள்
முறுக்கு மீசை, ருத்ராட்சம், வேட்டி சட்டையுடன் மிரட்டும் ரஜினிகாந்த்.. இணையதளத்தில் கசிந்த நியூ லுக்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி, நயன்தாரா, சதீஷ் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். ரஜினிகாந்துக்கு மகளாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வரும் இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துக் கொண்டே போகிறது.
தற்போது இந்த படத்தின் நியூ லுக் போஸ்டர் ரசிகர் வெளியிட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போஸ்டரில் இருக்கும் புகைப்படம் மற்றும் ரசிகர் ஒருவர் இதற்கு முன்னால் வெளியிட்ட புகைப்படமும் ஒரே மாதிரி உள்ளது, இதுதான் தலைவர் மீது ரசிகர் வைத்துள்ள வெறித்தனமான பாசம் என்றே கூறலாம்.
ரஜினிகாந்த் இந்த புகைப்படத்தில் திருநீறு, ருத்ராட்சம், வேட்டி சட்டை & முறுக்கு மீசை என்று மிரட்டியுள்ளார். தற்போது இந்த புகைப்படம் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த புகைப்படத்தை பார்க்கும் போது அருணாச்சலம், படையப்பா, முத்து போன்ற படங்களின் சாயலில் கதைக்களம் இருக்கலாம் என்று சினிமா வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
தர்பார் படத்தில் ஏற்பட்ட விநியோகஸ்தர்கள் பிரச்சனை அனைத்தும் இந்த படத்தின் மூலம் சரி செய்யப்படும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
