Tamil Cinema News | சினிமா செய்திகள்
தல அஜித் சொன்ன ஒத்த வார்த்தை.. சூப்பர் ஸ்டார் படத்தில் நடிப்பதற்கு கண்ணை மூடி ஓகே சொன்ன நயன்தாரா
இயக்குனர் சிவா விஸ்வாசம் படத்திற்கு அடுத்து சூப்பர் ஸ்டாரின் 168வது படத்தை மிக பிரம்மாண்டமாக எடுத்து வருகிறார். இந்த படத்தில் பல முன்னணி நடிகைகள் நடித்து வரும் நிலையில் நயன்தாராவும் இணைந்து உள்ளார் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இவரின் மூக்குத்தி அம்மன் திரைப்படம் விரைவில் வெளிவர காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ஒப்புதல் கொடுத்ததற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளதாம்.
தான் அடுத்தடுத்து ஒரே இயக்குனர் படத்தில் நடிப்பதால் குழப்பத்தில் இருந்த நயன்தாரா தல அஜித்தை சந்தித்து உள்ளார். நயன்தாராவின் இந்த குழப்பத்திற்கு முக்கிய காரணம் இருக்கிறது என்னவென்றால் முன்னணி திறமையான நடிகைகள் மீனா,குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளது தானாம்.
அப்போது தல அஜித் கூறியது சிறுத்தை சிவாவை நம்பி தைரியமாக நடிக்கலாம். அவர் அனைத்து கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பார் என்ற நம்பிக்கையாக கூறியுள்ளார்.

nayan-rajini
இதற்கு பின்னர்தான் நயன்தாரா தலைவர் 168 படத்திற்கு ஒப்புக் கொண்டாராம். ஏற்கனவே இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.ரஜினிகாந்துடன் நயன்தாராவிற்கு இது மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியைக் கேட்கும்போது பிகில் படத்தில் ஆனந்தராஜ்க்கு எந்த ஒரு வசனம் கூட இல்லாமல் இயக்குனர் அட்லீயின் செயல் தான் ஞாபகத்துக்கு வருகிறது. ஆனந்தராஜ் அட்லி பற்றி புலம்பி தள்ளி வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
