fbpx
Connect with us

Cinemapettai

தலைவர் 166 – பட்டையை போட்டு கொண்டு முருகதாஸ் செய்த வேலையை பார்த்தீர்களா.! ஆரம்பமே அமர்க்களம்தான்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தலைவர் 166 – பட்டையை போட்டு கொண்டு முருகதாஸ் செய்த வேலையை பார்த்தீர்களா.! ஆரம்பமே அமர்க்களம்தான்

பேட்ட படத்தை தொடர்ந்து அடுத்து ரஜினி முருகதாஸ் இயக்கத்தில் தலைவர் 166 படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளன.

ரஜினியின் 2.0 திரைப்படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் தான் இந்த திரைப்படத்தையும் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவிருக்கிறது, அதேபோல் அனிருத் இசையமைக்கும் தலைவர் 166 படத்திற்கு விக்னேஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

தற்பொழுது தேர்தல் பணி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருவதால் ரஜினி படத்தின் படப்பிடிப்பை தள்ளி வைத்திருந்தார்கள் இந்த நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பு வேலைகள் நடந்து முடிந்துள்ளது வருகின்ற ஏப்ரல் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அடுத்த வருடம் பொங்கல் படம் ரிலீசாகும் என்று தகவல் வெளியாகியுள்ளன இதை ரஜினியை சந்தித்த வெற்றி திரையரங்கு நிர்வாக இயக்குனர் ராகேஷ் கவுதமன் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார், மேலும் இதன் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஏ ஆர் முருகதாஸ் தலைவர் 166 படத்திற்காக ஒரு சிறப்பு பூஜை  பிரார்த்தனை செய்துள்ளார் இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

a.r.murugadoss

a.r.murugadoss

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top