fbpx
Connect with us

Cinemapettai

தல61: அஜித்-சுதா கொங்கரா படத்தின் கதை இப்படித்தான் இருக்கும்.. ஆரம்பத்திலேயே ரகசியத்தை கசியவிட்ட பிரபலம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தல61: அஜித்-சுதா கொங்கரா படத்தின் கதை இப்படித்தான் இருக்கும்.. ஆரம்பத்திலேயே ரகசியத்தை கசியவிட்ட பிரபலம்

தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். வலிமை படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில் தற்போது தல61 படத்துக்காக சுதா கொங்கரா தேர்வு செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வலிமை படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த படம் என்பதை முன்னரே படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அதேபோல் தல61 படத்தின் கதை எந்த மாதிரி இருக்கும் என்பதையும் வெளியிட்டுவிட்டனர்.

வடசென்னை பாணியில் முழுக்க முழுக்க அதிரடி கலந்த கதாபாத்திரத்தில் தல அஜித் வருகிறாராம். ஆரம்பம் முதல் இறுதி வரை படம் அதிரடியாகவே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை வலைபேச்சு நண்பர்கள் கூறினர்.

நேர்கொண்ட பார்வை படத்தில் தல அஜித்தின் கதாபாத்திரம் சாதுவாக இருந்த நிலையில் அதற்கு நேரெதிராக வலிமை மற்றும் தல61 படங்கள் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த கதை முதலில் தளபதி விஜய்க்கு கூறப்பட்டதாகவும், இடையில் முருகதாஸ் வந்ததால் சுதா கொங்கரா கதையை நிராகரித்து விட்டதாகவும் அப்போதே தகவல்கள் வெளியாகின.

தற்போது அதே கதையில் சிறு சிறு மாற்றங்கள் செய்து தல அஜித்திடம் கதையைச் சொல்லி ஓகே வாங்கிவிட்டாராம் சுதா கொங்கரா. இனி வரப்போகும் தல அஜித் படங்கள் அனைத்துமே தாறுமாறாக இருக்கும் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

Continue Reading
To Top