தல அஜித் தனக்கு ஒரு இயக்குனரை பிடித்து விட்டால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்க தயங்க மாட்டார் என்பதை சிறுத்தை சிவா விஷயத்தில் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் அஜீத்தின் குட்புக் லிஸ்ட்டில் சேர்ந்துள்ளார் பிரபல இயக்குனர்.
தல அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றன. இன்னும் சில தினங்களில் அந்த படப்பிடிப்பு முடிந்து விடுமாம். அதனைத் தொடர்ந்து சில நாட்களிலேயே தென்னாபிரிக்கா சென்று இறுதி கட்ட படப்பிடிப்பை முடிக்க முடிவு செய்துள்ளார்களாம்.
தல அஜீத்தும் விறுவிறுப்பாக வலிமை படத்தை முடித்துக் கொடுப்பதில் ஆர்வமாக இருக்கிறாராம். வலிமை படப்பிடிப்பு முற்றிலும் முடிந்தால்தான் அப்டேட் என தெரிவித்ததால் ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் வருகின்ற மே 1 தல பிறந்தநாளுக்கு வலிமை படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.
ஒருவேளை அது நடக்கவில்லை என்றால் அடுத்ததாக ஆகஸ்ட் 15ஆம் தேதி வலிமை படம் கண்டிப்பாக வெளியாகும் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள். இது ஒருபுறமிருக்க தல 61 படத்தின் இயக்குனர் யார் என்ற கேள்வியும் கோலிவுட் வட்டாரங்களில் எழுந்துள்ளன.

முன்னதாக சுதா கொங்கரா தல அஜித்துக்கு ஒரு கதை சொல்லி ஓகே செய்து விட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் வினோத்துக்கு வாய்ப்பு கொடுக்க உள்ளாராம் அஜித்.
வினோத்தின் புத்திசாலித்தனமான கதையும், வேலை செய்யும் விதமும் அஜித்திற்கு பிடித்ததால் தல61 படத்தை வினோத்துக்கே கொடுத்து விடலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.