Connect with us
Cinemapettai

Cinemapettai

thala61-ajith-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஐந்தாவது முறையாக அஜித்துடன் ஜோடி போடும் பிரபல நடிகை.. தல61 தாறுமாறு!

அஜித்துடன் ஏற்கனவே நான்கு படங்களில் நடித்து மாபெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்த பிரபல நடிகை ஒருவர் மீண்டும் தல அஜீத்துக்கு ஜோடியாக தல 61 படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

தல அஜித் நடிப்பில் 2019 ஆம் ஆண்டில் மட்டும் விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை என்ற இரண்டு படங்கள் வெளியாகின. ஆனால் அதன் பிறகு ஒரு வருடத்திற்கு மேலாகியும் தற்போது வரை அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு எதுவுமே இல்லை.

வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது மட்டுமே அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம். மேலும் வலிமை படத்தில் மற்ற நடிகர் நடிகைகள் யார் யார் நடிக்கிறார்கள் என்பது இன்னமும் ரசிகர்களுக்கு அதிகாரப் பூர்வமாகத் தெரியாது.

ஆங்காங்கே வந்த சில செய்திகள் மூலமே வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிப்பதாகவும், நடிகையாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிப்பதாகவும் தெரிந்து கொண்டனர். தற்போது வலிமை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடக்க உள்ளன.

கிளைமாக்ஸ் காட்சிகளுக்காக விரைவில் படக்குழு ஸ்பெயின் நாட்டிற்குச் செல்ல உள்ளனர். மேலும் தல அஜித் இப்போதே தல 61 படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். அதற்கு காரணம் வலிமை படம் எதிர்பாராத வகையில் நீண்ட நாட்கள் இழுத்து விட்டதால் அடுத்த படத்தை உடனடியாக ஆரம்பித்து சீக்கிரம் ரசிகர்களுக்கு கொடுத்துவிடவேண்டும் என்கிறாராம்.

அந்த வகையில் ஏற்கனவே தல 61 படத்தில் வினோத் மீண்டும் அஜித்துடன் இருப்பதாக வெளிவந்த தகவலை தொடர்ந்து தற்போது ஐந்தாவது முறையாக அஜீத்துடன் நயன்தாரா ஜோடி போட உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவருமாம். நயன்தாரா ஏற்கனவே அஜீத் உடன் பில்லா, ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் போன்ற படங்களில் ஜோடி போட்டுள்ளார்.

ajith-nayanthara-cinemapettai

ajith-nayanthara-cinemapettai

Continue Reading
To Top