தல அஜித் நடித்து வரும் 57வது படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றது.

நேற்று தல அஜித்தின் அடுத்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இன்னொரு பிரமாண்ட இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் அஜித்தின் 58வது இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அஜித் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பார் என்று கூறப்படுகிறது. அஜித்-முருகதாஸ் இணைந்த முதல் படமான ‘தீனா’ படத்திற்கு யுவன்ஷங்கர்ராஜாதான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை விஜயம் சினி கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் அஜித் 58′ படம் குறித்த அதிகாரபூர்வமான தகவல் வரும்வரை பொறுமை காப்போம்.