வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணையவிருப்பதும் ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கவிருப்பதும் நாம் ஏற்கனவே அறிந்ததுதான்.

அதிகம் படித்தவை:  படம் வருவதற்கு முன்னாடியே சாதனைக்கு மேல் சாதனை படைக்கும் விவேகம்.!!!

முன்னதாக இதன் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்குவதாக இருந்தது. ஆனால் தற்போது இப்படம் ஆகஸ்ட்டில் தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பான பாகுபலி இரண்டாம் பாகமும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.