fbpx
Connect with us

அஜித் படத்தின் டைட்டில்,பர்ஸ்ட் லுக் எப்போது வெளிவரும் தெரியுமா? முக்கிய தகவல்கள்

அஜித் படத்தின் டைட்டில்,பர்ஸ்ட் லுக் எப்போது வெளிவரும் தெரியுமா? முக்கிய தகவல்கள்

சிறுத்தை சிவா-அஜீத் இணையும் ‘தல 57’ படத்திற்கான பூஜை சமீபத்தில் எளிமையாக நடைபெற்றது. பூஜையைத் தொடர்ந்து படப்பிடிப்பு மற்றும் வெளியீடு உட்பட பல்வேறு புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் பல்கேரியா நாட்டில் தொடங்கி மேலும் சில ஐரோப்பிய நாடுகளில் நடைபெறவுள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக்கை 2017ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிடுகின்றனர். மொத்த படப்பிடிப்பையும் முடித்து 2017ம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

நாயகியாக காஜல் அகர்வால் காமெடியனாக கருணாகரன் ஆகியோரை ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை படக்குழு இன்னும் வெளியிடவில்லை.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top