தல அஜித் நடித்து வரும் ‘அஜித் 57’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து படக்குழுவினர் சென்னைக்கு திரும்பியுள்ள நிலையில் விரைவில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்து பல்வேறு வதந்திகள் இணையத்தில் உலாவி வருகிறது. ‘துருவா’ என்றும் வேறு பல டைட்டில்களும் வதந்திகளாக பரவி வரும் நிலையில் படக்குழுவினர்களிடம் இருந்து டைட்டில் குறித்த ஒரு தகவல் தற்போது கிடைத்துள்ளது.

அதிகம் படித்தவை:  விவேகம் மட்டும் வரட்டும்.! கவுண்டவுன் ஆரம்பித்துவிட்டது ..வில்லன் செம ட்வீட்..

ஏற்கனவே அஜித்-சிவா இணைந்த இரண்டு படங்களின் டைட்டில்களும் ‘V’ என்ற எழுத்தில் தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்திற்கும் ‘V’யில் ஆரம்பிக்கும் டைட்டில்தான் என்றும், வரும் டிசம்பரில் இந்த படத்தின் டைட்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அதுவரை அஜித் ரசிகர்கள் பொறுமை காக்கும்படியும் கூறியுள்ளனர்.