ajith

தல அஜித் நடிக்கவுள்ள 57வது படத்தின் பூஜை நேற்று சிறப்பாக நடைபெற்ற நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. படக்குழுவினர்களுக்கு நெருக்கமானோர் கூறிய தகவல்களில் இருந்து இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் பல்கேரியாவில் தொடங்கவுள்ளதாகவும் கிட்டத்தட்ட 80% படப்பிடிப்பு வெளிநாட்டில்தான் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் நாயகி அனுஷ்காதான் என்றும், நாயகிக்கும் அஜித்துக்கு இணையாக ஆக்சன் காட்சிகள் இருப்பதால் அனுஷ்காதான் பொருத்தமான தேர்வாக இருக்கும் என்று படக்குழுவினர் கருதியுள்ளனர்.

சர்வதேச ஸ்பை த்ரில்லர் படமாக அமையவுள்ள இந்த படத்தில் அஜித்துக்கு ஸ்டைலிஷான லுக் இருக்கும் என்றும், ஹாலிவுட் மேக்கப்மேன்கள் இந்த படத்தில் பணிபுரிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கான பாடல்களை கம்போஸ் செய்யும் பணியை அனிருத் தொடங்கிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.