தமிழ் சினிமாவில் 2019ல் முதல் இடம்.. தலக்கு ஒன்று.. தளபதிக்கு ஒன்று.. யார் எதில் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தல, தளபதி இருவமே இந்த ஆண்டு முதல் இடத்தை பிடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு எதில் முதலிடம் கிடைத்தது என்பதை இப்போது பார்ப்போம்.

தமிழில் டாப் நடிகர்கள் என்றால் அது ரஜினி, கமல் மற்றும் தல அஜித் மற்றும் தளபதி விஜய் இவர்கள் தான்.

இதில் தல அஜித் மற்றும் தளபதி விஜய் இவர்களின் ரசிகர்களுக்கு இடையே யார் டாப் என்ற போட்டி ஒவ்வொரு வருடமும் இருக்கும். அந்த வகையில் இந்த வருடமும் இருக்கிறது.

வசூலில் முதல் இடத்தில் விஜய்யும், சிறந்த திரைப்படம் என்ற பிரிவில் அஜித்தும் முதல் இடத்திலும் இருப்பதாக சினிமா டிராக்கர்கள் சொல்கிறார்கள். பிகில் படம் தான் இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே வசூலில் பெரும் சாதனை படைத்த படம் 300 கோடியை தாண்டிவிட்டதாக சொல்கிறார்கள்.

தமிழில் மட்டுமே வெளியான விஸ்வாசம் படம் 200 கோடியை தாண்டி வசூல் ரீதியாக 3வது இடத்தை பிடித்தாலும் இந்த ஆண்டின்சிறந்த திரைப்படம் என்றால் அது விஸ்வாசம் என்று சினிமா டிராக்கர்கள் சொல்கிறார்கள்.

அந்த வகையில் அஜித் விஜய் இருவருமே இந்த ஆண்டு முதல் இடம் தான்.

Leave a Comment