Tamil Cinema News | சினிமா செய்திகள்
எங்களுக்குள்ள ஆயிரம் நடந்தாலும் நாங்க இப்படிதான்.. அஜித் படத்தை புகழ்ந்து தள்ளிய விஜய்
சினிமா துறையில் தல தளபதி ஆடுபுலி ஆட்டம் ஆடுவது வாடிக்கைதான். அதாவது தங்களது படத்தை நேருக்கு நேர் மோத விட்டு ரசிகர்களின் மகிழ்ச்சியில் குளிர் காய்வது ஒரு நடிகனின் பேராசை என்றே கூறலாம்.
அந்த வகையில் தல தளபதி படம் வெளியே வந்தால் கோலாகலமாக தான் இருக்கும். 2014ம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்த ஜில்லா மற்றும் வீரம் படங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
நேசன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த ஜில்லா 50 கோடி பட்ஜெட்டில் உருவான படம். இந்த படம் கிட்டத்தட்ட 85 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் செய்தது. இதேநாளில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம் படம் 45 கோடி பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது, இந்தப் படமும் பாக்ஸ் ஆபீஸில் கிட்டத்தட்ட 130 கோடி வரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
தளபதி விஜய் ஜில்லா படத்தின் வெற்றி விழாவில் பங்கேற்கும் போது வீரம் படமும் வெற்றி கண்டுள்ளது அந்த படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.
இதேபோல் மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ‘நண்பர் அஜித் போல’ கோட் சூட் அணிந்து உள்ளதாக மேடையில் வெளிப்படையாக தெரிவித்திருந்தார். அதனை தல தளபதி ரசிகர்கள் இணையதளத்தில் கொண்டாடினார்கள்.
தல தளபதி இருவருமே நெருங்கிய நண்பர்கள் என்பதை அவ்வப்போது வெளி உலகத்திற்கு நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர். ஏனென்றால் அப்போதுதான் ரசிகர்களுக்கு இடையே ஏற்படும் மனக்கசப்பு நீங்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
