தல படத்தில் சாதித்த இவருக்கு தளபதி படத்தில் இடம் கிடையாது.!

ஒரு மிகப்பெரிய மலையோடு மோதுவதாக இருந்தால், சிறிய உளியாகவாது இருக்க வேண்டும் என அந்த காலத்திலேயே பழமொழி கூறியுள்ளார்கள், அப்படி இருக்க தல-யை கொண்டு மோதி அதில் வெற்றி பெற்றவர் கே ஜே ஆர் ராஜேஷ்.

கே ஜே ஆர் ராஜேஷ் விஸ்வாசம் தமிழக உரிமையை வாங்கி திரையிட முடிவு செய்தார், மிகப் பெரிய மலையான தன் நிறுவனத்தை எதிர்த்து, ஆம் பேட்ட திரைப்படத்துடன் விஸ்வாசம் திரைப்படத்தை கே ஜே ராஜேஷ் மோத விட்டார்.

ஆனால் சன் நிறுவனமோ உலகத்தில் இருக்கும் அனைத்து திரையரங்குகளையும் வளைத்துப் போட முடிவு செய்தது அப்படி இருக்க விஸ்வாசம் திரைப்படம் சன் நிறுவனத்திற்கு செம டஃப் கொடுத்து விட்டது, இருந்தாலும் விஸ்வாசம் திரைப்படத்தை கணிசமான திரையரங்கில் வெளியிட்டு 160 கோடி வரை வசூல் செய்து காட்டினார் ராஜேஷ், அதனால் இவர் மீது மரியாதை அதிகரித்தது சினிமா இண்டஸ்ட்ரியில்.

இப்படியிருக்க இதே சூட்டோடு விஜய்யின் தளபதி 63 திரைப்படத்தை தமிழகத்தின் உரிமையை வாங்கி வெளியிட ராஜேஷ் முடிவெடுத்தார், அதனால் தளபதி 63 படம் தொடங்கியதிலிருந்தே துண்டு போட்டு இடம் பிடித்து வைத்திருந்தார், ஆனால் இவருக்கு மிஞ்சியது ஏமாற்றம் தான்.

அதனால் தளபதி 63 திரைப்படத்திற்கு பலத்த போட்டி நிலவியது ஆனால் மதுரை அன்புவின் ஆலோசனைப்படி தளபதி 63 திரைப்படத்தை ஸ்கிரீன் சீன் என்ற நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது.

விஸ்வாசம் படத்தை வாங்கி வெறியாட்டம் ஆடிய ராஜேஷ்க்கு இப்படி ஒரு முடிவு ஏமாற்றம் தான் அதனால் தளபதி 63 போனாப் போகுது, தளபதி 64 பார்த்துக்கொள்ளலாம் என முடிவெடுத்து விட்டார் கே ஜே ஆர் ராஜேஷ்.

Leave a Comment