vivegam

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகும் விவேகம் திரைப்படம் வரும் 24ம் தேதி வெளியாகிறது.படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் படத்தின் டிரைலர் நேற்று(ஆக.,17) நள்ளிரவு 12.01 மணிக்கு யு-டியூப்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

டிரைலரை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த தல ரசிகர்கள், லைக் பட்டனை தெறிக்க விட்டனர்.டிரைலர் வெளியாகும் முன்பே விவேகம் டிரைலர் ஹேஸ்டேக்கை இந்திய அளவில் முதலிடத்தில் டிரண்ட் செய்தனர் அஜித் ரசிகர்கள்.மேலும் டிரைலர் வெளியான உடனே 31 நிமிடத்தில் 100கே லைக்குகளை பெற்று அகில இந்திய அளவில் சாதனை படைத்துள்ளது.

தொடர்ந்து சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. படம் வெளிவந்தால் என்னென்ன சாதனைகள் படைக்க போகிறதோ.தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகின் பல இடங்களில் ரசிகர்களின் அடுத்த பரபரப்பான எதிர்பார்ப்பாக மாறிவிட்டது விவேகம். இதற்கு நேற்று வெளிவந்த வீவேகம் டீசரே காரணம்.

இது குறித்து பிரபலங்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நாம் நேற்றே செய்தியாக வெளியிட்டிருந்தோம். படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில் மதுரையை சேர்ந்த ரசிகர்கள் முதல் ஆளாக 30 அடி உயரத்தில் விவேகம் படத்திற்காக கட்டவுட் வைத்து அசத்தியிருக்கிறார்கள்.

இதனால் படம் ரீலீஸ் இன்றா என்பது போல நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே திரையரங்குகள் மட்டுமல்ல, ரசிகர்களும் ஃபிளக்ஸ், போஸ்டர் என ஒரு கைபார்த்து விடுவார்கள். போட்டி போட்டு பேனர் வைத்தால் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை