Connect with us
Cinemapettai

Cinemapettai

dhoni

Sports | விளையாட்டு

தோனி நல்லாத்தான் விளையாடுவாரு ஆனால் டீம்ல சேர்க்க முடியாது.. சொல்வது எந்த அறிவி ஜீவி தெரியுமா?

தல தோனி இந்திய அணியில் சேர்ப்பது இப்போதைக்கு முடியாத சூழ்நிலை என்று கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மற்றும் இங்கிலாந்து வீரர் நாசிர் ஹுசைன் இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும் போது தல தோனி இந்திய அணியில் சேர்வதை பற்றி விவாதம் நடைபெற்றது.

இங்கிலாந்து வீரர் நாசிர் டோனியை போன்ற ஒரு திறமையான வீரரை எளிதாக அணியில் இருந்து நீக்கிவிட்டால் இந்த தலைமுறையில் இது போன்ற சிறந்த வீரரை இனி பார்க்கவே முடியாது. அதனால் அவரை அணியில் சேர்க்க வேண்டும் என்று நாசீர் தெரிவித்தார்.

இதனை மறுத்துப் பேசிய இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தோனிக்கு நானும் ரசிகன் தான், ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அவரை அணியில் சேர்க்க முடியாது.

ஏனென்றால் கடைசியாக அவர் ஆடிய 2019 உலகக்கோப்பை அதற்குப்பின் எந்த ஒரு ஆட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. இதனால் ஐபிஎல் மேட்சில் அவர் மீண்டும் தன்னை தயார் படுத்திக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.

அதுவும் தற்போது நடைபெறுமா என்ற கேள்விக்குறியாகி விட்டது. அதுமட்டுமல்லாமல் 2020 டி20 உலகக் கோப்பையில் அவர் ஆடுவதற்கான வாய்ப்பு வெகுவாக குறைந்து விட்டதாம். இதனால் தல தோனி இனி இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடுவது சந்தேகம்தான் என்ற செய்தி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top