Sports | விளையாட்டு
வரலட்சுமி போட்ட ‘தல’ ட்வீட்.. அதை பெரிய பஞ்சாயத்தாக மாற்றிய அஜித் ரசிகர்கள்
இந்திய அளவில் தல என்று செல்லமாக அழைத்தால் அது தோனி மட்டுமே, அதை போல் தமிழ்நாட்டில் தல என்று அழைத்தால் அஜித் மட்டுமே.
சில தினங்களுக்கு முன்பு தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் வரலட்சுமி சரத்குமார், அவர் வெளியிட்ட பதிவு
“எங்கள் சொந்த ThalaDhoni டி.பியைத் தொடங்குவதில் உற்சாகமாக இருக்கிறேன்.. நான் ThalaDhoni பெரிய ரசிகை என்பது அனைவருக்கும் தெரியும்.. இந்த ஆண்டு #IPL2020-இல் அவரைத் தவறவிட்டோம், ஆனால் அவர் மீண்டும் களமிறங்குவார் என்று நான் நம்புகிறேன் … Haappyyyy Bdayyyy” என்று தெரிவித்திருந்தார்.

thala-ajith-cinemapettai-1
இதனை நோட்டமிட்ட ரசிகர்கள் அவரை வச்சு செய்துள்ளனர். அதாவது தல என்றால் அஜித் மட்டும் தான் இது கூட உங்களுக்கு தெரியாதா.? என்பது போன்று கேட்டுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் சினிமா வாரிசு நடிகை என்பதால் இதுபோன்ற பேசுகிறீர்களா என்றும் கமெண்ட் செய்துள்ளனர். ஏற்கனவே சினிமா வாரிசுகளால் தான் மும்பையில் சுஷாந்த் தற்கொலை நடந்தது என்பதை இந்த இடத்தில் மறைமுகமாக தாக்கியுள்ளனர்.
2001-ல் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த பெயரை வைத்து விட்டதாகவும், அவரிடம் சென்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறி உள்ளனர். தற்போது இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வரலட்சுமி சரத்குமார் ஒரு பிறந்தநாள் வாழ்த்து கூறியது குற்றமா என்பது போன்று தற்போது தலையில் கையை வைத்துக்கொண்டு புலம்புகிறாராம்.

ajith-varalaxmi-comment
