Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித்தின் முகவரி படத்தில் ஃபர்ஸ்ட் சாய்ஸ் ஜோதிகா இல்லையாம்.. 4 நாட்களுக்கு பின் தளபதி ஹீரோயினை துரத்திய இயக்குனர்
துரை இயக்கத்தில், தல அஜித் நடிப்பில் 2000 ஆண்டில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் தான் முகவரி. இந்த படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், படத்தைப் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் இயக்குனர் துரை, முகவரி படத்தில் ஜோதிகா கதாநாயகியாக எப்படி வந்தார் என்ற சீக்ரெட்டை தற்போது உடைத்துள்ளார். அதாவது நெஞ்சினிலே படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்த இஷா கோப்பிகர் தான் முதல் முதலாக முகவரி படத்திற்கு ஹீரோயினாக கமிட்டானாராம்.
அதன்பிறகு இஷா கோப்பிகர் முகவரி படத்திற்காக நான்கு நாட்கள் ஷூட்டிங்கில் பங்கேற்று உள்ளாராம். பிறகுதான் அந்த கதாபாத்திரத்திற்கும் இஷா கோப்பிகருக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை என்பதால், கதாநாயகியை மாற்ற வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் இயக்குனர் துரை.

mugavaree-cinemapettai
அதன்பின் ஜோதிகாவை வைத்து முகவரி படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கை பார்த்த தயாரிப்பாளர், ‘இயக்குனர் துரையின் முடிவு சரிதான்’ என்று பாராட்டினாராம். ஏனென்றால் ஜோதிகா முகவரி படத்தில் தனது அசத்தலான நடிப்பை வெளிக்காட்டினார் என்பதை அடித்துக் கூறலாம்.

Isha-Koppika-cinemapettai
அதே வகையில் இஷா கோப்பிகர் முகவரி படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருந்த மிகப்பெரிய வாய்ப்பை தவறவிட்டுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
