Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித் விழுந்து விழுந்து சிரித்து பார்த்த படம் எது தெரியுமா? அதுவும் அவரை கலாய்த்த படமாம்
தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற நடிகன் என்றால் அது தல அஜித். நேற்று, இன்று, நாளை என அனைத்து தலைமுறையினரையும் ரசிகர்களாக கொண்டுள்ள நடிகர் இவர். இவர் திரைப்பட வெளியீடு என்றால் தமிழ்நாடு தல நாடாகி விடும். அந்த அளவு படத்தை கோலாகலமாக கொண்டாடி தீர்த்து விடுவார்கள் அவரது ரசிகர்கள்.
படத்தில் நடிப்பதை தவிர வேறு எந்த இடத்திலும் தல அஜித்தை அவ்வளவு எளிதில் பார்த்துவிட முடியாது. ரசிகர்கள் அனைவரும் சமமே என ரசிகர் மன்றத்தை கலைத்தவர். இந்நிலையில் அவரது ஆஸ்தான இயக்குனரான சரண் அவர்கள் தல அஜித் விழுந்து விழுந்து என்ஜாய் பண்ணிய படத்தை பற்றிய அனுபவங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, தல அஜித் அவர்கள் எப்போதும் நல்ல தமிழ் சினிமாக்களை தியேட்டரில் சென்று பார்க்கும் பழக்கம் உடையவர். அந்த வகையில் அவருக்கு பிடித்த காமெடி படம் என்றால் அது சி.எஸ். அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்த தமிழ் படம் ஆகும்.
இந்த படத்தில் தமிழ் சினிமாவை தாறுமாறாக கலாய்த்து தள்ளி இருப்பார்கள். பெரிய நடிகர் சிறிய நடிகர் என்ற பாராமல் அனைவரையும் பாரபட்சமின்றி அனைவரையும் கலாய்த்து இருப்பார்கள். இந்த படத்தை அஜித் விழுந்து விழுந்து சிரித்து ஆனந்தமான பார்த்தார் என சரண் தெரிவித்துள்ளார்.
