Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith-gun

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சினிமாவைத் தாண்டி தங்கப் பதக்கத்துடன் சாம்பியன்ஷிப்பை வென்ற அஜித்.. உங்களால் தமிழகத்திற்கே பெருமை தல

தமிழ் சினிமாவில் எக்கச்சக்க ரசிகர் பட்டாளத்திற்கு சொந்தக்காரனான தல அஜித் நடிப்பை தாண்டி, கார் பைக் ரேஸ், போட்டோகிராபி, ஏரோ மாடலிங், சமையல் போன்ற தனக்குப் பிடித்த துறைகளிலும் பல சாதனைகளை புரிந்து வருகிறார்.

அதிலும் குறிப்பாக தற்போது துப்பாக்கி சுடுதலில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி, மாநில அளவில் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டது மட்டுமல்லாமல் பத்து மீட்டர் பிஸ்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆறு பதக்கங்களை தல அஜித் அணி வென்றுள்ளது.

எனவே மாநில அளவில் நடைபெற்ற 46 – வது துப்பாக்கி சுடும் சாம்பியன் போட்டியில் தங்கம் வென்றுள்ள தல அஜித், கழுத்து நிறைய தங்க பதக்கத்தை அணிந்தபடி இருக்கும் புகைப்படம் ஆனது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

-ajith-championship-cinemapettai

மேலும் தல அஜித் அணி தமிழகத்திற்காக வென்றுள்ள பதக்கங்களின் லிஸ்ட் இதோ!

  • ஏர் பிஸ்டல் 10 மீட்டர் அணி – தங்கம்.
  • 32 மீட்டர் சென்டர் ஃபயர் பிஸ்டல் (எம் ஆர்) – தங்கம்.
  • 22 மீட்டர் ஸ்டாண்ட் பிஸ்டல் (ஐ.எஸ்.எஸ்.எஃப்) – தங்கம்.
  • 22 மீட்டர் ஃப்ரீ பிஸ்டல் – தங்கம்.
  • 22 மீட்டர் ஸ்டாண்ட் பிஸ்டல் (எம் ஆர்) – வெள்ளி.
  • 32 மீட்டர் சென்டர் ஃபயர் பிஸ்டல் (ஐ.எஸ்.எஸ்.எஃப்) – வெள்ளி.

thala-ajith-cinemapettai

ஆகையால் 4 தங்கப் பதக்கத்தையும், 5 வெள்ளிப் பதக்கங்களையும், வென்ற அஜித் அணியை தல ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில் மூலம் தங்கள் வாழ்த்துக்களை தெரிவிப்பது மட்டுமல்லாமல் தலையில் தூக்கிக் கொண்டாடி வருகின்றனர்.

Continue Reading
To Top