‘விவேகம்’ படத்துக்குப் பிறகு, தல அஜித் – சிறுத்தை சிவா நான்காவதாக இணையும் படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. விவேகத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸே தயாரிப்பதாகவும், ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கி, தீபாவளிக்கு வெளியாகும் எனவும் அறிவிப்பு வந்தது.

ajith

சமீபத்திய அஜித் படங்களின் தலைப்பு எல்லாம் பாதி படத்திற்கு மேல் வளர்ந்த பின்னர் வெளியாகின. ஆனால் படம் துவங்கும் முன்னரே விசுவாசம் என அறிவித்து தல ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியது படக்குழு.

ajithpolice

விசுவாசம் படத்தில் அஜித் சால்ட் அன்ட் பெப்பர் தோற்றத்தில் நடிக்காமல் இளமையான தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் இந்த படத்திற்காக அஜித் உடல் எடையை குறைத்து உடலை கட்டுகோப்பாக வைத்துள்ளாராம்.

Siva-and-ajith
Siva-and-ajith

விசுவாசம் படத்தில் அஜித்துடன் இணைந்து இந்த நடிகரும் நடிக்க இருக்கிறாராம் அவர்கள் விஜய்சேதுபதி அல்லது நிவின் பாலியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் அஜித்திற்கு வில்லனாக சரத்குமார் நடிக்க இருக்கிறார் என்று படக்குழுவிற்கு நெருங்கியவர்கள் கூறுகிறார்கள்.
இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.