Tamil Cinema News | சினிமா செய்திகள்
வலிமை படத்தில் நயன்தாராவிற்கு முன் யார் நடிக்க இருந்தார் தெரியுமா? தல அஜித்திற்கு மறுப்பா!
நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்குப் பின்பு அதே கூட்டணியில் மீண்டும் இணைந்து தற்போது வலிமை படத்தை தயார் செய்து வருகின்றது. இதில் H.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஸ்வாசம் படத்திற்கு பின் வலிமை படத்தில் ஜோடியாக நயன்தாரா இணைந்துள்ளார். தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் தயாரிப்பாளர் போனி கபூரை சந்தித்து பேசியதால் இது உறுதியாகி விட்டது. நயன்தாரா மற்றும் தல அஜீத் ஜோடி ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
ஆனால் இந்த படத்தில் நயன்தாராவிற்கு முன்னதாக ப்ரணிதி சோப்ரா இணைவதாக இருந்ததாம். ஆனால் அவர் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா பற்றி உருவாகும் படத்தில் பிஸியாக இருப்பதால் கால்சீட் கொடுக்க வில்லையாம். ஆகையால் இந்த படத்தில் இருந்து அவர் விலகிக் கொண்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக மீண்டும் நயன்தாரா தல அஜித்துடன் இணைவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தப்படமும் விஸ்வாசம் போன்று கண்டிப்பாக வெற்றிபெறும் என்ற நோக்கத்தில் படக்குழுவினர் வெறித்தனமாக வேலை பார்த்து வருகின்றனர். தல அஜித் புதிய கெட்டப் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

preenithi
