Tamil Cinema News | சினிமா செய்திகள்
வலிமை படத்தில் அஜித் பைக் வீலிங் செய்யும் புகைப்படம் இணையத்தில் லீக்.. 49 வயதில் கெத்து காட்டும் தல!
40 வயதுக்கு மேல் ஆகிவிட்டாலே பெரும்பாலான நடிகர்கள் அலுங்காமல் குலுங்காமல் அழகாக நடித்து செல்லும் காலகட்டத்தில் உயிரை பணயம் வைத்து நடிக்கும் நடிகர்களை பார்த்தால் தானாகவே மரியாதை தோன்றுகிறது.
ஸ்டன்ட் காட்சிகளில் டூப் போட்டு பெருமை பேசிக்கொள்ளும் நடிகர்களுக்கு மத்தியில் எப்போதுமே எவ்வளவு ரிஸ்கான காட்சிகளாக இருந்தாலும் அசால்டாக நடிப்பதில் வல்லவர் தல அஜித்.
அந்த வகையில் தல அஜித்தின் வலிமை படத்தில் பல ரிஸ்க் காட்சிகளில் நடித்து அனைவரையும் மிரள வைத்துள்ளார்.
வலிமை படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வராததால் கடந்த ஒரு வருடமாகவே தல ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர்.
இந்நிலையில் வலிமை படப்பிடிப்பிலிருந்து தல அஜித் பைக் வீலிங் செய்யும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி காட்டுத்தீ போல் வைரல் ஆகிவிட்டது.

ajith-valimai-cinemapettai
இந்த புகைப்படத்தை பார்த்து அசந்து போன பிரபலங்கள் தங்களது ட்விட்டர் பக்கங்களில் அஜித்தை போற்றிப் புகழ்ந்து வருகின்றனர்.
விவேகம் படத்தை போல் வலிமை படத்திலும் பைக் சேசிங் மற்றும் கார் சேஸிங் போன்றவை இடம்பெறும் என தெரிகிறது.
