Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்த ஒரு விஷயத்தில் தல, தளபதிக்கு ஒத்துப் போகும்.. அஜித் இயக்குனர் கொடுத்த அட்டகாச தகவல்
விஜய், அஜித் ரசிகர்களிடையே அவ்வப்போது இணையதளத்தில் மோதிக் கொள்வது வாடிக்கைதான். ஆனால் தல தளபதி இருவருக்கும் ஒத்துப் போகக்கூடிய விஷயத்தை இயக்குனர் எச்.வினோத் சமிபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தல அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை மற்றும் தற்போது வலிமை படத்தை இயக்கி வருகிறார் எச்.வினோத். அஜித்தை பொருத்தவரை முதலில் குடும்பம், அதற்குப் பின்னர் ரசிகர்களின் சந்தோஷம்.
அதுமட்டுமில்லாமல் எப்பொழுதுமே பாசிட்டிவான ஒரு வைப்ரேஷன் இருந்துட்டே இருக்குமாம். ‘எண்ணம் போல் வாழ்க்கை’ என்பதற்கு உதாரணமாக தல அஜித் இருக்கிறார் என்று இயக்குனர் கூறியிருப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க பல சினிமா பிரபலங்கள் தளபதியை பற்றி இரகசியத்தை கூறும் போது அமைதி என்று மட்டும்தான் தெரியும். அவருடன் அமர்ந்து இருந்தாலே நம்மளுக்கு ஒரு பாஸிட்டிவ் எனர்ஜி கிடைக்கும்.
இந்த விஷயத்தில் தல தளபதி இரண்டு பேரும் ஒத்துப்போவது சுவாரசியமான சம்பவம் தான். தற்போது தல அஜித்தின் வலிமை படம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
தளபதி விஜய் ஒரு புறம் படத்தை வெளியிட முடியாமல் தவித்து வருகிறார். மாஸ்டர் படம் கிட்டத்தட்ட அடுத்த வருட பொங்கலுக்கு தியேட்டரில் வெளிவரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
