Tamil Cinema News | சினிமா செய்திகள்
தல பற்றி இந்த ரகசியங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா?
நேற்று பிறந்தநாளை கொண்டாடிய தல அஜித் குறித்த சில ரகசியங்கள் வெளியாகி இருக்கிறது. இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித். ஒரு படத்திற்காகவே நிறைய ரிஸ்க் எடுப்பதை வழக்கமாகி கொண்டு இருப்பவர். கடைசியாக நடித்த விஸ்வாசம் படத்தில் அவரின் பிட்னஸ் கேலிக்கெல்லாம் ஒரே பாடலில் முற்றுப்புள்ளி வைத்தார். தன்னாலும் சிக்ஸ் பேக் வைக்க முடியும் என நிரூபித்தவர். இதை போல அஜித் பற்றி பலருக்கும் தெரியாத ரகசியங்களும் இருக்கிறது.
அஜித்திற்கு புகைப்பட கலை என்றால் அவ்வளவு பிரியம் என பலருக்கு தெரியும். ஆனால், கேமராவில் ப்ளாஷ் போடாமல் எடுப்பதில் அவர் கில்லாடியாம். அதிக இயற்கை வெளிச்சத்தையே பயன்படுத்துபவர். நடிகை ஸ்ருதிஹாசன், அப்புக்குட்டி ஆகியோருக்கு புது ஸ்டைலை கொடுத்தது இவரின் புகைப்படங்கள் தானாம்.
பாடல் காட்சிகளில் பாடகரின் குரலுக்கு வாய் அசைப்பது தான் பல நாயகர்களின் வாடிக்கையாகி இருக்கிறது. ஆனால், அஜித்தின் இண்ட்ரோ பாடல் எப்போதுமே ஹை பிட்சில் இருக்கும். அதற்கேற்றார் போல நடித்து, அவரே பாடிய எபெக்ட் கொடுப்பது அஜித்தால் மட்டுமே முடியும்.
தமிழகத்தில் பைக் ரேஸில் ஆர்வம் கொண்ட தமிழக இளைஞர்களின் விவரங்களை சேகரித்து இருக்கும் அஜித். யாருக்குமே தெரியாமல் முகம் தெரியாமல் வேறொருவர் வழியே உதவிக்கொண்டு இருக்கிறார்.
தலயின் இஷ்ட தெய்வம் அஞ்சநேயர் தானாம். வாரம் ஒரு முறை கோயில் செல்வதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்.
தன் வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு அவர் வீட்டின் அருகிலே வீடுகள் கட்டி கொடுத்து இருக்கிறார். அதுவும் கூட, நெருங்கிய வட்டாரத்தில் இருந்து வெளி வந்த தகவலே தவிர, அவராக சொல்லி விளம்பரம் தேடிக்கொள்ள விரும்பாதவர்.
படப்பிடிப்பில் அஜித் தனது காட்சிகள் இல்லாத போது கேரவனில் அடைந்து கிடக்க மாட்டார். சிறு சிறு வேலைகளின் தன் பங்கு இருக்க வேண்டும் என அவர்களுடன் இணைந்து வேலை செய்யும் எளிமை அஜித்துக்கு மட்டுமே இருக்கிறது.
அஜித்துக்கு பிடித்த லிஸ்ட்களில் முக்கியமானது சமையல். அதிலும், அவர் செய்யும் பிரியாணிக்கு பிரபலங்கள் பலரும் அடிமை என்பது மறுக்க முடியாத உண்மை.
