தல அஜித் நடிப்பில் கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேலாக வலிமை படம் உருவாகி வருகிறது. இன்னமும் பத்து நாட்கள் படப்பிடிப்பு பாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான் வெளிநாட்டு அனுமதி வருமா? என வழிமேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் இரண்டாவது படமாக வலிமை படம் உருவாகி வருகிறது. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
95% படப்பிடிப்பை முடித்து விட்டு மீதி 5 சதவீத படப்பிடிப்பு எப்போது என்பது தெரியாமல் தடுமாறிக் கொண்டே இருக்கிறது படக்குழு. இதற்கிடையில் நாட்களை வீணடிக்க வேண்டாம் என வலிமை படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கி விட்டார்களாம்.
மேலும் எடிட்டிங் பணிகளைகூட தொடங்கி விட்டதாக கூறுகின்றனர். இதனைத் தொடர்ந்து வருகின்ற மே 1ஆம் தேதி தல அஜித் பிறந்தநாளை முன்னிட்டு வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மும்பையைச் சேர்ந்த நிறுவனமொன்று ரெடி செய்து கொடுத்துள்ளது. இதைப் பார்த்த அஜித் மிகவும் பிடித்துப் போய் விட்டாராம். அதுமட்டுமில்லாமல் இதுவரை வந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே இதுதான் தரமாக உள்ளது எனவும் படக்குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளார் அஜித்.
தல அஜித்தே மிரண்டுபோன அந்த போஸ்டரை பார்க்க தல ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர். மேலும் இதுவரை வந்த பர்ஸ்ட் லுக போஸ்டர் சாதனைகளை எல்லாம் வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முறியடித்து விட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள் தல ரசிகர்கள்.
