ரஜினிக்கு அடுத்து மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளவர் தல அஜித் என்பது அனைவரும் தெரிந்ததே. அதுமட்டுமின்றி தற்போதைய சமூக வலைத்தள உலகில் அனைத்து சமூக வலைத்தளங்களும் அஜித் ரசிகர்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தான் ஒரு தல ரசிகர் என ஒரு சின்ன நடிகர் கூறினால் அவரை ஒருசில நிமிடங்களில் விஐபி ஆக்குவதும், தல’யை யாராவது விமர்சனம் செய்தால் அவரை ஒருவழி ஆக்குவதும் சமூக வலைத்தள அஜித் ரசிகர்களின் முழுநேர பணி.

அந்த அளவுக்கு அஜித்தின் மேல் ரசிகர்கள் வெறியாக இருக்கும் நிலையில் கோவை ஆர்.எஸ்.புரத்தில் தல ரசிகர் ஒருவர் ‘கோலிவுட் ரெஸ்டாரெண்ட்’ என்ற ஓட்டலை ஆரம்பித்துள்ளார். பெயர்தான் கோலிவுட் ரெஸ்டாரெண்ட் என்றாலும் உள்ளே சென்று பார்த்தால் எங்கும் ‘தல’ மயம்தான்.

தல அஜித்தின் விதவிதமான புகைப்படங்கள், பஞ்ச் டயலாக்குகள், என இந்த ஓட்டலின் உரிமையாளர் அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த ஓட்டலின் மெனு கார்டில் கூட தல படங்கள்தான். அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் இந்த ஓட்டலுக்கு விரும்பி சாப்பிட வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.