Tamil Cinema News | சினிமா செய்திகள்
வலிமை படத்தை விட மரண மாஸ் கதையைக் சொன்ன வினோத்.. அய்யோ வேண்டவே வேண்டாம் என மறுத்த அஜித்
தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு எச் வினோத் மீண்டும் ஒருமுறை தல அஜித்துடன் இணைந்து பணியாற்றி வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை போனிகபூர் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.
ஏற்கனவே வினோத் முதன்முதலில் நேர்கொண்ட பார்வை எனும் ரீமேக் படத்தை இயக்க ஒப்புக் கொள்ளவில்லையாம். அவரின் சொந்த கதை ஒன்றைச் சொல்லி தான் அஜித்திடம் வாய்ப்பை பெற்றார். ஆனால் அதற்கு முன் குறுகிய காலத்தில் நேர்கொண்டபார்வை படத்தை இயக்க வேண்டும் என அஜித் கோரிக்கை வைத்ததால் அதை இயக்கி முடித்தார்.
தற்போது தல அஜித், எச் வினோத் சொந்தமாக எழுதிய கதையில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க அதிரடி கலந்த போலீஸ் கதையாக உருவாகியிருக்கும் இந்த படத்தை அஜித் மிகவும் விரும்புவதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால் அதற்கு முன்பே தல அஜித்திடம் வேறு ஒரு கதையை வினோத் கூறியிருந்தாராம். முழுக்க முழுக்க மங்காத்தா படத்தை போன்ற மிகவும் கொடிய வில்லன் கலந்த ஹீரோ கதாபாத்திரம் கொண்ட கதையை உருவாக்கி அஜித்திடம் கூறினாராம்.
அஜித் மங்காத்தா படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருந்தாலும் தற்போது குடும்ப ரசிகர்கள் விஸ்வாசம் படத்தின் மூலம் அதிகரித்ததால் அவர்களை இழந்து விடக்கூடாது என்ற முற்போக்குச் சிந்தனையில் அந்த கதையை நிராகரித்ததாக தெரிகிறது.
சமீபகாலமாக தல அஜித், பெண்கள் மற்றும் குழந்தைகளை அதிகம் கவரக்கூடிய கமர்ஷியல் அம்சம் உள்ள படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் ரசிகர்களுக்காக இந்த மாதிரி ஒரு படத்தையும் பண்ணலாமே தல. தல 61 படமா அதை பண்ணிவிட்டிருங்க.
