Tamil Cinema News | சினிமா செய்திகள்
காஞ்சிபுரம் போலீசுடன் அஜித்.. வைரலாகும் போட்டோக்களின் காரணம் இது தானாம்
தல அஜித்தை பொறுத்தவரை தன் சினிமா வாழக்கை வேறு பர்சனல் லைப் வேறு என்று பிரித்து வாழுபவர். படங்களில் நடிப்பது இவரது தொழிலாக இருந்தாலும், தன் ஹாபி, பேஷன் என்று அதற்கும் தனி நேர ஒதுக்குவார். பைக், கார் ரேஸிங் , போட்டோகிராபி, மினி ஹெலிகாப்டர் போன்றவை இவரது ஆர்வங்களில் சில.
சென்னை குரோம்பேட்டையிலுள்ள எம்.ஐ.டி கல்லூரியில் உள்ள ஏரோ மாடலிங் (AERONAUTICAL) துறையில் உள்ள மாணவர்களுக்கு ஆலோசகராக செயல்பட்டார். இந்த டீம் தக்க்ஷா சர்வதேச அளவில் அசத்தியது நாம் அறிந்ததே.
அஜித் போலீசாருடன் இருக்கும் புகைப்படங்கள் ட்விட்டரில் வைரலானது.

thala ajith
தல அஜித் அவர்கள் ஆளில்லா விமானத்தை இயக்குவது குறித்து போலீசாருக்கு பயிற்சி அளித்ததாக கூறப்படுகிறது. ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் இந்த போடோஸை ஷேர் செய்து வருகிறார்கள்.

thala ajith
