fbpx
Connect with us

Cinemapettai

அடுத்த படத்தில் மீண்டும் காக்கி சட்டை மாட்டவுள்ள தல அஜித்குமார்..!

News | செய்திகள்

அடுத்த படத்தில் மீண்டும் காக்கி சட்டை மாட்டவுள்ள தல அஜித்குமார்..!

சிறுத்தை படத்தை கார்த்தியை வைத்து இயக்கிய சிவா, அதையடுத்து வீரம், வேதாளம், விவேகம் என தொடர்ச்சியாக அஜித் நடித்த மூன்று படங்களை இயக்கினார்.

இந்த மூன்று படங்களில் கடைசியாக இயக்கிய விவேகம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது என்றாலும் அஜித் ரசிகர்கள் அந்த படத்தை கொண்டாடினார்கள். மேலும், இந்த மூன்று படங்கள் மட்டுமின்றி கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்த என்னை அறிந்தால் படத்திலும் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பிலேயே நடித்தார் அஜீத்.

இந்த நிலையில், அடுத்தபடியாக தான் நடிக்கும் புதிய படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பை மாற்றப்போகிறாராம் அஜித். அதுமட்டுமின்றி, அஜீத்தின் புதிய படத்தையும் சிறுத்தை சிவாவே இயக்குகிறார் என்று செய்திகள் வெளியாகி வந்தபோதிலும்,

ajith

ajith

அஜித்தின் அடுத்த படத்தை வேறு இயக்குனர் இயக்குவதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு சிறு இடைவெளி கொடுத்து விட்டு மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

விவேகம் படத்த்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து அஜித் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தில் போலீஸ் உடை அணிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ajith

அஜித் நடிப்பில் வெளியான ‘விவேகம்’ படம் வெற்றிகரமாக 50 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. சமீபத்தில் சிவா-அஜித் கூட்டணியில் உருவாகும் படம் வரலாறு சம்மந்தப்பட்ட கதை என்று கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது இவர்கள் கூட்டணியில் உருவாக இருக்கும் படம் போலீஸ் கதை என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அஜித் நடிப்பில் வெளியான ‘ஆஞ்சநேயா’, ‘மங்காத்தா’, ‘என்னை அறிந்தால்’ பட பாணியில் காக்கி சட்டை அணிய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ajith

ajith

இயக்குனர் சிவா இயக்கிய முதல் படம் ‘சிறுத்தை’. இதில் கார்த்தி போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனால், அஜித்தை வைத்து போலீஸ் படம் இயக்க இருப்பதாக சொல்கிறார்கள்.தற்போது ஓய்வில் இருக்கும் அஜித், தன்னுடைய அடுத்த படம் குறித்த தகவலை விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top