Tamil Cinema News | சினிமா செய்திகள்
குடும்பத்துடன் ஷாப்பிங் வந்த தல அஜித் லேட்டஸ்ட் புகைப்படம்.. அப்போ ஜிம் ஒர்க்கவுட் எல்லாம் பொய்யா கோபால்!
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார் தல அஜித். அடுத்ததாக அஜித் நடிப்பில் படம் வெளியாக உள்ளது. பாதி படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் திடீரென படப்பிடிப்பை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் படக்குழுவினர் வருத்தத்தில் உள்ளனர்.
இரண்டாவது முறையாக வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பதால் இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன. மேலும் இந்த படத்தில் தல அஜித் சிக்ஸ்பேக் வைத்து சட்டை இல்லாமல் சண்டை போடப் போவதாக தகவல்கள் சமீபத்தில் வெளியானது.
அதற்காக தொடர்ந்து ஜிம் ஒர்க் அவுட் செய்து வருவதாகவும் தகவல்கள் கசிந்தன. ஆனால் சமீபத்தில் தல அஜித் தன்னுடைய குடும்பத்தினருடன் ஷாப்பிங் சென்றுள்ளார்.
அதில் உடல் எடை குறைந்த மாதிரி தெரியவில்லை. இதனால் ரசிகர்கள் மிகுந்த அப்செட்டில் இருக்கின்றனர்.

ajith-latest
இருந்தாலும் வலிமை படம் இப்போதைக்கு தொடங்க போவதில்லை என்பதால் படபிடிப்பு நடைபெறும் போது மீண்டும் அஜித் உடல் எடையை குறைத்து விடுவார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ajith-latest-01
இருந்தாலும் டிரெண்டிங் செய்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.
