Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith-kumar-1

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித் வாழ்க்கையில் இனி இப்படி ஒரு படம் வராது.. மிரட்டலான கதையில் உருவாகும் தல61 என்ற பிரபலம்

முன்னணி இயக்குனரான மணிரத்னத்திடம் ஏழு ஆண்டுகள் துணை இயக்குனராக பணியாற்றி, அதன்பின் இந்திய சினிமாவையே ஒரு கலக்கு கலக்கி சிங்க பெண்ணாக வலம் வருபவர் இயக்குனரும் திரைகதையாசிரியருமான சுதா கொங்கரா.

இவர் ஆங்கிலத்தில் இயக்கிய மித்ர், மை ஃபிரண்ட் படமானது தேசிய விருதை தட்டிச் சென்றது. அதன்பின் தமிழில் துரோகி, இறுதிச்சுற்று, சூரரை போற்று போன்ற வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட படங்களை உருவாக்கிய பெருமைக்குரியவர்.

தற்போது தல அஜீத்துக்கு பொருத்தமான திரைக்கதையை உருவாக்கி தனது அடுத்த ஆக்சன் படத்தை இயக்க முடிவெடுத்துள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா.

இந்தக் கதையை தன்னிடம் சுதா தெரிவித்ததாகவும், சூரரை போற்று படத்தை போன்றே இந்தப் படமும் சிறந்த படமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்றும் சுதா தற்போது தனது புது புது படைப்புகளால் எட்டாத உயரத்தை நோக்கி செல்கிறார்.

அவருடன் சூரரை போற்று படத்தில் இசை அமைப்பாளராக பணியாற்றுவதற்கு நான் ரொம்ப பெருமைப்படுகிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அஜித்தை வைத்து சுதா கொங்கரா இயக்கும் படம் இந்திய சினிமாவையே மிரட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தல அஜித்தும் சுதா கொங்கராவும் கூட்டு சேரும் சீக்ரெட் ரிலீஸ் செய்த ஜி.வி. பிரகாஷ்-ஐ தலையில் தூக்கிக் கொண்டாடி வருகின்றனர். தல அஜித் படத்தின் புது அப்டேட்டை அவருடைய ரசிகர்கள் தெறிக்க விடுகின்றனர்.

Continue Reading
To Top