அஜித்தின் அழகில் மயங்கி காதலில் விழுந்த நடிகைகள்.. லிஸ்ட் ரொம்ப பெருசா இருக்கே

தமிழ்சினிமாவில் ஜெமினி கணேசனுக்கு அடுத்தபடியாக காதல் மன்னனாக வலம் வந்து கொண்டிருப்பவர் தல அஜித். காதல் மன்னன் என்றால் நடிகைகளை தன்னைச் பின் சுற்ற வைப்பது தான். அப்படி படத்தில் காதலிக்கும் போது உண்மையாகவே அஜித் மீது காதல் பைத்தியம் பிடித்த நடிகைகளின் வரிசைகளை தற்போது பார்க்கலாம்.

ஹீரா ராஜகோபால், 90களில் கனவு கன்னியாக வலம் வந்தவர் அஜீத் குமாருடன் சேர்ந்து காதல் கோட்டை என்ற படத்தில் நடித்தவர். நடித்தது மட்டுமில்லாமல் அஜித் மீது காதல் வலையிலும் விழுந்தார் ஹீரா. ஒரு தலைப்பட்சமாக காதலித்த பின்பு அதை ஏற்றுக் கொள்ளவில்லையாம்.

மானு, காதல் மன்னன் என்ற படத்தில் அஜீத் குமாருக்கு ஜோடியாக நடித்தவர். அஜித்குமாரின் அழகில் மயங்கி தனது காதலை வெளிப்படுத்தி உள்ளார். ஆனால் மனுஷன் அதற்கும் மசியவில்லையாம்.

காதல்கோட்டை படத்தில் முக்கிய கதாநாயகியாக நடித்தவர் தேவயாணி இவர் ‘நீ வருவாய் என’ படத்தில் மீண்டும் அஜீத் குமாருடன் இணைத்தார். இவரும் காதல் வலையில் விழுந்து உள்ளார், அஜித்தின் அழகில் மயங்கி தனது காதலை வெளிப்படுத்தி உள்ளார். அதாவது காதல் கோட்டை படத்தில் நடித்த பின் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் தல அஜித் தட்டி தூக்கி உள்ளார் என்று தான் கூற வேண்டும்.

சுவாதி வான்மதி படத்தில் அஜீத் குமாருடன் ஜோடி சேர்ந்தவர் சுவாதி. படத்தில் நடிப்பதற்காக செய்த காதல் உண்மையானது என்று நினைத்து இவரும் காதல் வலையில் வீழ்ந்துள்ளார். ஆனால் தல இது ஒரு வதந்தி என்று மறுப்பு தெரிவித்து, இது போன்று எதுவுமில்லை நான் காதலிக்கவில்லை என்றும் அவர் வெளிப்படையாக தெரிவித்து விட்டார்.

ஆனந்த பூங்காற்றே, வில்லன், சிட்டிசன் போன்ற படங்களில் ஜோடி போட்ட கண்ணழகி மீனா, தல அஜித்தை சுற்றி சுற்றி காதலித்தாராம், தன் காதலையும் வெளிப்படையாக தெரிவித்தாராம். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டதாக செய்திகள் வெளிவந்தது.

இப்படி நடிப்பிற்காக ஏற்பட்ட காதல் உண்மை என்று நினைத்து தல அஜித்தை சுற்றி வந்த நடிகைகளின் பட்டியல் அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் கடைசியில் நான் காதலிப்பது ஷாலினியை மட்டும் தான் என்று அவரைத் திருமணமும் செய்து கொண்டார்.