Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஷாலினிக்கு கொடுத்த சத்தியத்தை 21 வருடங்களாக காப்பாற்றி வரும் அஜித்.. நீங்க மனுஷனே இல்ல தல
தமிழ் சினிமாவில் பல பேர் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்தாலும் இன்றும் ரசிகர்களால் கொண்டாடபடுபவர்கள் தல அஜித் மற்றும் நடிகை ஷாலினி. அமர்க்களம் படத்தின் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஷாலினி படத்தில் நடிப்பதை நிறுத்தி விட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் தல அஜித் நடிகை ஷாலினிக்கு செய்து கொடுத்த சத்தியத்தை 21 வருடங்களாக காப்பாற்றி வருகிறார் என்ற செய்தியைக் கேட்டு காதலின் மீது பெரிய மரியாதையே வந்துவிட்டது என்று சொல்லலாம்.
அதாவது ஷாலினி தல அஜித்திடம் திருமணத்திற்கு பிறகு வருடத்திற்கு ஒரு படம் தான் நடிக்க வேண்டும் எனவும் ஒரு மாதத்தில் வெறும் 15 நாட்கள் மட்டுமே படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும் எனவும் சத்தியம் வாங்கிக் கொண்டு தான் திருமணம் செய்தாராம். அதற்கு காரணம் தன்னுடனும் குழந்தைகளுடனும் அதிக நேரத்தை செலவிட வேண்டும் என்பதற்காகவே அப்படி ஒரு சத்தியத்தை வாங்கிக் கொண்டாராம் ஷாலினி.
தல அஜித் அவர்களும் அதற்கு மரியாதை கொடுக்கும் வகையில் தற்போது வரை அந்த பாணியைத்தான் பின்பற்றி வருகிறாராம். முடிந்தவரை படப்பிடிப்பு தளத்திற்கு தன்னுடைய குடும்பத்தை அழைத்துச் சென்று விடுவாராம். வெளிநாடு படப்பிடிப்புகளில் போது மட்டுமே இந்த கொள்கைகளில் சற்று வித்தியாசம் ஏற்படும் எனவும் தல அஜீத்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காதல் என்றால் என்ன எனக் கேட்பவர்களுக்கு இதுதான் காதல் என புரிய வைத்து விட்டார்கள் தல அஜித் மற்றும் ஷாலினி.
