fbpx
Connect with us

அஜித் படங்களை இந்தியில் ரீ-மேக் செய்ய முன்னணி நடிகர்கள் ஆர்வம்.. அட இந்தப்படம் கூடவா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித் படங்களை இந்தியில் ரீ-மேக் செய்ய முன்னணி நடிகர்கள் ஆர்வம்.. அட இந்தப்படம் கூடவா?

அஜித் நடிப்பில் உருவாகும் கமர்சியல் படங்களை இந்தியில் ரீ-மேக் செய்ய முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஹிந்தியில் கமர்சியல் படங்கள் அதிகமாக வியாபாரமாகி வருவதால் தொடர்ந்து ஹிந்தி முன்னணி நடிகர்கள் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் கமர்சியல் படங்களை ரீமேக் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் அக்ஷய் குமார் தல அஜித்தின் வீரம் படத்தை ரீமேக் செய்து வருகிறார். அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்தது. இந்நிலையில் சிவா அஜித் கூட்டணியில் உருவான வேதாளம் படத்தையும் ஹிந்தியில் ரீமேக் செய்ய இருக்கின்றனர்.

இதில் பிரபல இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் நடிக்க இருக்கிறார். விரைவில் இந்த படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என செய்திகள் வெளிவந்துள்ளன. வீரம் படம் கூட சிவா அஜித் கூட்டணியில் உருவானதுதான்.

தமிழில் உருவான விக்ரம் வேதா படம் கூட ஹிந்தியில் ரீமேக் ஆக போவதாக செய்திகள் வெளிவந்தன. அதன் அறிவிப்பும் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் மொழி படங்கள் மற்ற மொழிகளில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி உள்ளதால் தமிழ் படங்களில் மார்க்கெட் நிலவரம் அதிகமாக வாய்ப்பு உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top