Tamil Cinema News | சினிமா செய்திகள்
பைக் ரேசிங்.. வெளிநாடு செல்லும் வலிமை படக்குழு.. எத்தனை படத்துல தல இதே சீன்
தல அஜித் தற்போது தமிழ் சினிமாவில் வசூல் நாயகனாக உயர்ந்துள்ளார். சமீப காலமாக வெளியான இவரது படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக் குவித்தது. இந்நிலையில் தற்போது எச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.
நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக வினோத் உடன் இணைந்து பணியாற்றி வருகிறார் தல அஜித். வலிமை படம் முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் சென்னையில் நடந்த முடிந்த முதல்கட்ட படப்பிடிப்பில் சண்டை காட்சிகள் படமாக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது. அஜித் கூலிங் கிளாஸ் போட்டு சண்டை போடும் காட்சி இணையதளத்தில் லீக்காகி பெரும் வைரலானது.
இந்நிலையில் பைக் ரேசிங் காட்சிகளை எடுப்பதற்காக தற்போது படக்குழு சுவிட்சர்லாந்து செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அஜித் படமென்றாலே கார் ரேஸ், பைக் ரேஸ் போன்றவற்றை இருந்தே ஆகவேண்டும் என அஜித் கண்டிஷன் போடுகிறாரா அல்லது அஜீத்துக்கு கதை சொல்ல வேண்டும் என்பதற்காகவே இயக்குனர்கள் இந்த மாதிரி காட்சிகளை சேர்த்துக் கொள்கிறார்களா என்பது புரியவே இல்லை.
அஜித் சாதாரண கதைகளில் நடித்தால் கூட அதை ஏற்றுக்கொள்ள ரசிகர்கள் தயாராக இருக்கும் பொழுது படத்திற்கு படம் இதே காட்சிகளை வைத்தால் அஜித் ரசிகர்கள் மட்டுமே அதனை ரசிப்பார்கள். மற்றவர்களுக்கும் பிடிக்க வேண்டுமென்றால் புதிதாக ஏதாவது செய்தாக வேண்டும் என்பதே நிதர்சனம்.
