Tamil Cinema News | சினிமா செய்திகள்
பட்டாசு வெடிக்க தயாராகும் தல ரசிகர்கள்.. வலிமை படத்தின் அட்டகாச அப்டேட்
தல அஜித் நடிப்பில் இந்த வருடம் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்டபார்வை ஆகிய இரண்டு படங்களும் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. வசூலிலும் சாதனை புரிந்துள்ளது.
தல அஜித் தற்போது நேர்கொண்டபார்வை படத்தை இயக்கிய எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதால் அதற்கேற்றவாறு உடல் அமைப்பு பெறுவதற்காக ஜிம்மில் தொடர்ந்து ஒர்க்கவுட்டில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் விருது விழா ஒன்றில் பட ஆரம்ப மற்றும் ரிலீஸ் தேதி ஆகியவற்றை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியது, டிசம்பர் 13ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும், 2020 தீபாவளி அன்று படம் வெளியாக இருப்பதாகவும் ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்துள்ளார். இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு தல அஜித்தின் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருப்பதால் அவரது ரசிகர்கள் தற்போது பட்டாசு வெடிக்காத குறையாக கொண்டாடி வருகின்றனர்.
ஆக்சன் கதையில் உருவாகி வரும் வலிமை திரைப்படம் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைத்து உருவாக உள்ளது.
