Tamil Cinema News | சினிமா செய்திகள்
இதுவரை பார்த்திராத மிரட்டலான கெட்டப்பில் தல அஜித்.. அடக்கடவுளே ! இதை ஏன் படத்துல யூஸ் பண்ணல
தல அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளார். இவரது திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் தமிழ்நாடே திருவிழாக் கோலம் ஆகிவிடும். அந்த அளவுக்கு ரசிகர் பட்டாளங்களை கொண்டவர்.
தல அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். எப்போது வலிமைப்படுத்தி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரும் என தல ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டுள்ளனர்.

ajith-01
இந்நிலையில் தல அஜித்தை இதுவரை பார்த்திராத கெட்டப் ஒன்று இணையதளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது. ஸ்டைலாக தாடி வைத்துக் கொண்டு இருக்கும் அந்த புகைப்படத்தை பார்த்து இந்தக் கட்டத்தில் தல அஜித் அப்படி நடித்தால் செமையா இருக்கும் என வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ajith-02
அந்த புகைப்படத்தை பார்க்கும் போது ஏறக்குறைய ஏகன் படத்தின் போஸ்டர் போல் தான் தெரிகிறது. இருந்தும் தல அஜித் இப்போது அந்த கெட்டப்பில் நடித்தால் செம ஸ்டைலிஸ் ஆக இருக்கும். அதனை ரசிகர்கள் தாறுமாறாக கொண்டாடித் தீர்த்து விடுவார்கள்.
ஆணழகன் அஜித் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
