Connect with us

Cinemapettai

ajith-cover

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தல60 படத்திற்கு இசையமைப்பது யார் தெரியுமா? பக்கா மாஸ் தகவல்

இந்த வருடத்தில் இரண்டு வெற்றிகளை கொடுத்து அடுத்த வருடத்தின் வெற்றியாக அடியெடுத்து வைத்திருக்கும் தல அஜித், எச். வினோத் இயக்கத்தில் தொடர்ச்சியாக இரண்டாவது முறை இணைகிறார். பக்கா ஆக்ஷன் படமாக உருவாக இருக்கும் இப்படத்திற்கு முதல்முதலாக யுவன் சங்கர் ராஜாவை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்தது படக்குழு.

ஆனால் படத்தின் கதை வெளிநாட்டில் பயணிப்பதாலும் மேலும் பின்னணி இசை மிகவும் முக்கியம் என்பதாலும் உடனடியாக இசையமைப்பாளரை படக்குழு மாற்றிவிட்டது.

யுவன் சங்கர் ராஜாவை விட பின்னணி இசை சரியாக கோர்ப்பதில் வல்லவர் சமீபகாலமாக யாருமில்லை என்பது உண்மைதான். ஆனால் அப்பேர்ப்பட்ட இசையமைப்பாளரையே மாற்றி இருக்கிறார்கள் என்றால் சற்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

தற்போது காப்பான் படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றிய ஹாரிஸ் ஜெயராயை தல60 படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். காரணம் என்னவென்று விசாரித்த போது, காப்பான் படத்தில் பாடல்கள் விமர்சிக்கப்பட்டாலும் பின்னணி இசை பெரிதும் பேசப்பட்டது.

மேலும் வெளிநாடு வகை படங்களுக்கு பின்னணி இசை கோர்ப்பு செய்வதில் ஹாரிஸ் ஜெயராஜ் வல்லவர். எனவேதான் படத்தின் தன்மை கருதி அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இத கண்டிப்பா படிங்க

To Top