Tamil Cinema News | சினிமா செய்திகள்
தல 60 படத்திற்கு தாறுமாறாக ரெடியாகும் தல அஜித்.. இந்த வாட்டி மிஸ் ஆகாது
Published on
தல அஜித் அவர்களின் நடிப்பில் இந்த வருடத்தில் இரண்டு படங்கள் ரிலீசாகி வசூலை வாரிக் குவித்தன. விஸ்வாசம் படத்தை சிறுத்தை சிவாவும், நேர்கொண்ட பார்வை படத்தை எச். வினோத்தும் இயக்கி இருந்தனர். நேர்கொண்ட பார்வை படம் ஹிந்தி பிங்க் படத்தின் ரீமேக் ஆகும்.
இதனைத்தொடர்ந்து தல 60 படத்தையும் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச். வினோத் இயக்குகிறார். அதிக சண்டைக் காட்சிகள் இடம்பெறும் இந்த கதையில் தல அஜித் பிட்டாக வரவேண்டும் என இயக்குனர் கட்டளையிட்டார்.
அதே போல் தல அஜித்தும் ராப்பகலாக ஜிம்மிலேயே கிடந்து படத்தின் கதைக்கு ஏற்றபடி கட்டுமஸ்தான உடலை பெற தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
எனவே தல 60 படம் வேற லெவல்ல இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தியை கேட்ட தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
எண்ணம் போல் வாழ்க்கை..
