Tamil Cinema News | சினிமா செய்திகள்
சத்தமில்லாமல் நடந்த தல-60 பட பூஜை.. ஆக்சன் அவதாரத்தில் அஜித்
வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் புதிய படத்தின் பூஜை தற்போது சத்தமில்லாமல் நடந்து உள்ளது. சமீபகாலமாக தல அஜித் தொடர்ச்சியாக ஒரே இயக்குனருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகளை வழங்கி வருகிறார். இவ்வகையில் சிறுத்தை சிவாவுக்கு 4 படம் கொடுத்த தல அஜித் தற்போது தொடர்ச்சியாக இரண்டாவது படத்தை கொடுத்துள்ளார்.
முழுமையாக ஆக்சன் கலந்த கதையில் தல அஜித் தற்போது களமிறங்க உள்ளார். இறுதியாக நடித்த இரண்டு படங்களில் சென்டிமென்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். ஆனால் தல60 திரைப்படம் முழுக்க முழுக்க அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த ஜனரஞ்சகமான படமாகவும், மேலும் அப்பா சென்டிமென்ட் கலந்த கலவையாக எடுக்கப்பட உள்ளது.
நீண்ட நாட்களுக்கு பிறகு தல அஜித் கருப்பு நிற முடியுடன் திரையில் தோன்ற உள்ளதால் ரசிகர்கள் என்ற எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் காத்து கிடக்கின்றனர். இந்த வருடத்தின் வசூல் மன்னன் தல அஜித் தான் என்பது தற்போது வரை யாராலும் தவிர்க்க முடியாத சாதனையாக உள்ளது.
தொடர்ச்சியாக இரண்டு படங்களை 100 கோடிக்கு மேல் கொடுத்து அசத்தினார். தல60 பட பூஜையின் போது எடுக்கபட்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

AK-60
