fbpx
Connect with us

தல அஜித் கடைசியாக கலந்துகொண்ட ஆடியோ வெளியீட்டு விழா எது தெரியுமா?

ajith-untold

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தல அஜித் கடைசியாக கலந்துகொண்ட ஆடியோ வெளியீட்டு விழா எது தெரியுமா?

தல அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களுள் ஒருவர். தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக திகழ்ந்து வருகிறார். ஆனால் சமீபகாலமாக தயாரிப்பாளர்கள் இவர் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர். அது என்னவென்றால், தான் நடிக்கும் படங்களின் இசை வெளியீட்டு விழாவில் கூட கலந்து கொள்வதில்லை என்பதுதான்.

இதனால் வியாபாரத்தில் சிறு சிக்கல் ஏற்படுவதாக வெளிப்படையாகவே அறிவித்து இருந்தனர். ஆனால் தல அஜித் சமீபத்தில்தான் இந்தவாறு நடந்து கொள்கிறார். தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று இருக்கிறார்.

இவர் கடைசியாக கலந்துகொண்ட இசை வெளியீட்டு விழா அசல் படம் தான். இந்த படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் மூலம் நடிகர் பிரபு தயாரித்திருந்தார். ஆனால் இந்த படம் படுதோல்வியை சந்தித்தது.

asal-audio

asal-audio

அதன்பிறகு எந்த ஒரு திரைப்பட விழாக்களிலும் கலந்து கொள்ளாத தல அஜித், நீண்டநாள் தேடிக்கொண்டிருந்த வெற்றியைக் கொடுத்த மங்காத்தா படத்தின் வெற்றி விழாவில் மட்டும் கலந்து கொண்டார். அதன் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

mankatha-success-meet

mankatha-success-meet

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top