Tamil Cinema News | சினிமா செய்திகள்
அதிரடி ஒர்க்கவுட்டில் தல அஜித்.. தெறிக்கவிட தயாராகும் தல60.. வேற லெவல் மாஸ் புகைப்படங்கள்
சமீபகாலமாக தல அஜித் அவர்கள் தொடர்ச்சியாக ஒரே தயாரிப்பாளர் மற்றும் ஒரே இயக்குனருக்கு படங்கள் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். சிறுத்தை சிவாவுடன் தொடர்ந்து 4 படங்கள் நடித்துக் கொடுத்த தல அஜித், தற்போது தொடர்ச்சியாக எச். வினோத் இயக்கத்தில் இரண்டாவது முறையாக தல60 படத்தில் நடிக்க உள்ளார்.
தல60 திரைப்படம் முழுக்க முழுக்க அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. கூடவே தந்தை, மகள் என பாசப் போராட்டமும் இணைக்கப்பட்டுள்ளது.
நார்மல் படங்களின் சண்டைக் காட்சிகளை போலல்லாமல் உலக தரம்வாய்ந்த சண்டை காட்சிகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எச். வினோத் தல அஜித் இடம் கட்டுமஸ்தான உடல் தோற்றம் இருந்தால் இந்த கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
உடனே சரி என்று சொன்ன தல அஜித், சொன்னதைச் செய்வார் என்பதை போல தொடர்ந்து உடற்பயிற்சி கூடத்திலேயே இருந்து உடலை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார். விவேகம் படத்தின் போது முதலில் கட்டுமஸ்தான உடல் அமைப்புடன் இருந்த தல அஜித், சிறு காயம் ஏற்பட்டதன் விளைவாக உடற்பயிற்சியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.
தற்போது வேற லெவல் உடற்பயிற்சி செய்து வருகிறார். கண்டிப்பாக தல60 படம் தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புகைப்படங்கள் கீழே :

ajith-gym-01

ajith-gym
தல டக்கரு டோய்..
