fbpx
Connect with us

Cinemapettai

அஜித் முதன் முதலில் ஒரு கோடி சம்பளம் வாங்கிய படம் எது தெரியுமா? தல அப்பவே அப்படி!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித் முதன் முதலில் ஒரு கோடி சம்பளம் வாங்கிய படம் எது தெரியுமா? தல அப்பவே அப்படி!

தல அஜித்(Ajith Kumar) தமிழ் சினிமாவில் தற்போது வசூல் நாயகனாக கலக்கி வருகிறார். கடைசியாக வெளியான விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படங்களும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து அனைவரையும் அசர வைத்தது.

தமிழ் சினிமாவில் அதிக தோல்விப் படங்களைக் கொடுத்தும் தல அஜித் தான். இருந்தாலும் தன்னுடைய விடா முயற்சியால் தற்போது இந்த உயரத்தில் இருக்கிறார். அடுத்ததாக வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது 50 கோடி சம்பளம் வாங்கும் தல அஜித் முதன் முதலாக ஒரு கோடி சம்பளம் வாங்கியது குறித்த தகவல் தான் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

தல அஜித்தை வைத்து ஆனந்த பூங்காற்றே மற்றும் அவள் வருவாளா ஆகிய வெற்றி படங்களை கொடுத்தவர் தான் ராஜ் கபூர். தற்போது குணச்சித்திர நடிகராக கலக்கி வரும் இவர் இயக்குனர் என்பது பலருக்கும் தெரியாது.

மூன்றாவது முறையாக தல அஜித்துடன் கூட்டணி அமைக்க ராஜ்கபூர் முடிவு செய்திருந்தாராம். அப்போது பிரபலமான தயாரிப்பாளராக இருந்த ரோஜா கம்பைன்ஸ் நிறுவனத்திடம் தல அஜித்தை வைத்து இரட்டை வேடங்களில் ராமச்சந்திரா எனும் பெயரில் ஒரு கதையை உருவாக்கி இருந்தாராம்.

அதற்காக முதன்முதலில் தல அஜித்துக்கு ஒரு கோடி சம்பளம் பேசப்பட்டதாம். பிறகு சந்தர்ப்பம் சூழ்நிலை காரணமாக இந்த படம் கைவிடப்பட்டது. பிறகு ராமச்சந்திரா என்ற பெயரில் வேறு ஒரு கதையில் சத்யராஜ் நடித்த படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதனை ராஜ்கபூர், சித்ரா லட்சுமணன் நடத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறார்.

Continue Reading
To Top