Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித் வாழ்க்கையில் மறக்க முடியாத தோல்வியை தழுவிய திரைப்படங்கள் எவை தெரியுமா? இது கூட ஹிட் இல்லையா
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை தற்போது தல அஜித் என்றால் ஒரு பெரிய மாஸ் ஓபனிங் உள்ளது என்பது உண்மைதான். தற்போது வெளிவரும் அஜித்தின் படங்கள் வசூலில் சாதனைகள் படைத்து வருகிறது. ஆனால் அப்பேர்ப்பட்ட அஜித் ஒரு காலத்தில் இரண்டாம் கட்ட நடிகராக தள்ளப்பட சில படங்களே காரணம்.
முதல் முதலில் அஜித்துக்கு அடி சறுக்கிய படம் நேசம். காதல் கதையாக உருவான இந்த படம் சலிப்பான திரைக்கதையால் தோல்வியை தழுவியது. அதனைத் தொடர்ந்து வெளிவந்த ரெட்டை ஜடை வயசு படமும் கொஞ்சம் கூட சுவாரஸ்யம் இல்லாததால் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. ராஜா படம் தற்போது டிவியில் போட்டால் பார்த்து ரசிகர்கள் அப்போது தியேட்டரில் பார்த்து இருந்தால் தோல்வி பட லிஸ்டில் வந்திருக்காது.
ஆஞ்சநேயா படம் அஜித் ஏன் அடித்தார் என்பது அஜீத்துக்கும் தெரியவில்லை அவரது ரசிகர்களுக்கும் தெரியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அதனைத் தொடர்ந்து ஜனா என்ற படம் தல அஜித்தை இரண்டாம் கட்ட நடிகர் ரேஞ்சுக்கு கீழே தள்ளியது வேதனைக்குரியது தான்.
ஜி படத்தின் பாடல்கள் பேசப்பட்ட அளவுக்கு படம் பேசப்படவில்லை என்பதே உண்மை. ஆழ்வார் படம் அஜீத்தின் திரையுலக வாழ்க்கையை கேள்விக்குறியாக ஆக்கியது. அஜித் நயன்தாரா நடித்த ஏகன் திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளிவந்த படத்தின் மீதான பரபரப்பை அதிகப்படுத்தியது.
ஆனால் திரைக்கதையில் கவனம் செலுத்தாமல் நயன்தாராவை கவர்ச்சியாக காட்டுவதில் அக்கறை காட்டியது இந்த படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. பில்லா படத்தின் வெற்றிக்கு பிறகு பில்லா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியது. அஜித் ரசிகர்களை இதனை உருவாக்கமலேயே இருந்திருக்கலாம் என யோசிக்க வைத்த திரைப்படம்.
அஜித் கெத்தாக நடித்த ரெட் படம் அவரது ரசிகர்களை தவிர வேறு யாராலும் ரசிக்க முடியவில்லை. அசல் என்ற படத்தில் ஏன் நடித்தோம் என தல அஜித் இப்போதுவரை வருத்தப்பட்டு கொண்டிருக்கிறாராம். விவேகம் படம் தோல்வி என்று கூறினாலும் வசூல் ரீதியாக அது ஓரளவு வெற்றி படம் தான் என்பது அனைவரின் கருத்து தான்.
இத்தனை சோதனைகளையும் மீறி தற்போது தல அஜித் முன்னணி நடிகராக இருக்கிறார் வளர்ந்திருப்பது அவரது தன்னம்பிக்கையைக் காட்டுகிறது. இதனை தான் அவரது ரசிகர்கள் அவர்களது வாழ்க்கையில் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயமாகும்.
