Connect with us

Cinemapettai

தனி ஒருவனாக களத்தில் நிற்கும் தல அஜித்.. திருந்தவே மாட்டாரா என அதிருப்தியில் ரசிகர்கள்

ajith-valimai-01

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனி ஒருவனாக களத்தில் நிற்கும் தல அஜித்.. திருந்தவே மாட்டாரா என அதிருப்தியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் டூப் போடாமல் முடிந்தவரை சண்டைக்காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடிக்கக் கூடியவர் தல அஜித். இது அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த விஸ்வாசம் மற்றும் நேர்கொண்டபார்வை ஆகிய திரைப்படங்கள் வசூலில் பெரிய வெற்றி பெற்றது.

அந்த வகையில் இரண்டாவது முறையாக வினோத் உடன் இணைந்து வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹாலிவுட் தரத்தில் சண்டைக் காட்சிகள் வேண்டும் என படக்குழு முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் படு ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளை எடுக்கவும் தயாராகி உள்ளது. இந்நிலையில் தல அஜீத்திடம், சண்டை காட்சிகளில் டூப் போட்டு கொள்ளலாம் என வினோத் தெரிவித்துள்ளார்.
அதற்கு தல அஜித் முடிந்தவரை டூப் போடாமல் நானே செய்கிறேன் என தைரியமாக கூறியுள்ளார்.

இருந்தும் வினோத்துக்கு இதில் உடன்பாடு இல்லையாம். காரணம் அந்த அளவு ரிஸ்க்கான காட்சிகள் படத்தில் இருப்பதால் அஜித்துக்கு எதுவும் ஆகக்கூடாது என யோசித்துக் கொண்டே முழுகவனத்துடன் வேலை செய்கிறாராம்.

இதை கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா உலகினர் இந்த விஷயத்தில் மட்டும் தல அஜித் சார் திருந்தவே மாட்டார் என அதிர்ச்சியுடன் கூறி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top