இந்த கதையில் பவன் கல்யாண் நடித்தால் நல்லாயிருக்கும் என்று அஜீத் பிரபல இயக்குனரிடம் கூறியுள்ளார்.

கோலிவுட்டின் வசூல் மன்னன் என்று பெருமையோடு அழைக்கப்படுபவர் நடிகர் அஜீத். இவர் நடித்த படம் வெளியானால் தமிழக திரையரங்குகளில் திருவிழாகோலம்தான் காணப்படும். ஆனால், இவர் மிகவும் மதிக்கும் நடிகர் யார் தெரியுமா? தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் பவன் கல்யாண் தான்.

ஒரு முறை தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் அருண் பிரசாத் நடிகர் அஜீத்திடம் ஒரு கதையை கூறியுள்ளார். முழுக்கதையையும் கேட்ட அஜீத், ‘சார் இதுபவன் கல்யாண் பண்ணினால் நன்றாக இருக்கும். இந்த கதையில் வரும் கேரக்டருக்கு அவர்தான் பொருத்தமானவர்.அவரிடம் இந்த கதையை கூறுங்கள்’’ என்றுகூறி அனுப்பி வைத்தாராம் நடிகர் அஜீத்.