Tamil Cinema News | சினிமா செய்திகள்
தல அஜித் ஃபார்முலா ரேஸில் கலந்து கொண்டபோது யாரும் பார்க்காத புகைப்படம்.. செம வைரல்!
பல தொடர் தோல்விகளை கொடுத்து தற்போது தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருபவர் தல அஜித். அடுத்ததாக வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.
தல அஜித்துக்கு சினிமாவை தாண்டி டெக்னிகலாக சில விஷயங்களில் ஆர்வம் அதிகம். அந்த வகையில் எந்த ஒரு புது பைக் வாங்கினாலும் அதை பிரித்து மேய்ந்து விடுவது அவரது சுபாவம்.
அதேபோல்தான் கார் வகைகளில் தல அஜித்துக்கு ஆர்வம் அதிகம். அதனால்தான் பல கார் பந்தயங்களில் கலந்து கொண்டுள்ளார். பல பரிசுகளையும் பெற்றுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் ஹெலிகாப்டர் போன்ற டெக்னிக்கல் சார்ந்த விஷயங்களிலும் அவருக்கு ஈடுபாடு அதிகம் என்பதை அடிக்கடி பார்க்க முடிகிறது. இதற்காக அண்ணா யுனிவர்சிட்டி மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தார்.
தல அஜித் ஃபார்முலா ரேஸில் அடிக்கடி கலந்து கொள்வது வழக்கம். ஆனால் தற்போது தான் அந்த மாதிரி எதிலும் கலந்து கொள்வதில்லை. ஒரு சில வருடங்களுக்கு முன்பு வரை அதில் ஆர்வமாக இருந்தார்.
அப்போது அவர் பார்முலா ரேஸில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ajith-formula-race-cinemapettai
