அஜீத் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘விவேகம்’. இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்ப்பை பெற்றாலும் கலவையான விமர்ச்சனங்களை பெற்றது. இதனால் மீண்டும் சிவாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

Ajith
Ajith

அஜித் ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் விதமாக யாரும் எதிர்ப்பார்க்காதப்படி அஜீத்தின் அடுத்தப்படத்தின் தலைப்பு ‘விசுவாசம்’ என்று வைத்துள்ளனர்

அஜித் அவருக்கென ஒரு பாணியை வைத்திருக்கிறார். அதன் மீது கவனம் செலுத்தி கொண்டே அவர் பயணம் செய்கிறார். ரசிகர் மன்றமே வேண்டாம். சமூக வலைதளம் வேண்டாம் என சோலோ நடை போட்டு வருகிறார்.

ajithpolice

சிவா-அஜித் கூட்டணியில் 4வது முறையாக புதுப்படம் தயாராக இருக்கிறது. ரசிகர்களிடம் எந்த ஒரு பரபரப்பையும் ஏற்படுத்தாமல் படக்குழு இப்படத்தின் பெயர் விசுவாசம் என்று அதிரடியாக வெளியிட்டனர்.

மற்றபடி படத்தின் நாயகி மற்றும் இசையமைப்பாளர் இன்னும் உறுதியாகவில்லை. இந்த நிலையில் இப்படத்தின் ஃபஸ்ட் லுக் தயாராகிவிட்டதாகவும், ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

anushka shetty birthday 2
anushka shetty

அது என்னவென்றால் இதுவரை சால்ட் அன் பெப்பர் லுக்கில் நடித்த அஜித் இப்படத்திற்காக கருப்பு நிற தலைமுடியில் நடிக்க இருக்கிறாராம். அதோடு விவேகம் படத்தை விட இப்படத்தில் எடையை இன்னும் குறைக்க இருக்கிறாராம். ஃபஸ்ட் லுக்கில் புதுவித லுக்கில் அஜித் இருப்பார் என்று தெரிகிறது.

keerthisuresh_cinemapettai
keerthisuresh

மேலும், இப்படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக கூறப்பட்டது, ஆனால், இறுதியாக அனுஷ்காவை ஹீரோயினாக கமிட் செய்துள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.