தல அஜித்தை இனி பார்க்கவே முடியாது.. செய்திகேட்டு உறைந்த போன ரசிகர்கள்

நடிகர்களில் சிலரை திரைப்படத்தை தவிர வேறு எந்த நிகழ்ச்சிகளிலும் பார்க்க முடியாது. அப்படிப்பட்ட நடிகர்களில் ஒருவர் தான், தல அஜித். இவரது படங்களுக்கு ஆடியோ லான்ச் பங்க்ஷன் இருக்காது. மேலும் புரமோஷனில் கூட அஜித் கலந்து கொள்ள மாட்டார்.

இந்நிலையில் அவரது ரசிகர்கள் பொதுவெளியில் ஓட்டு போடுவதற்கோ அல்லது டப்பிங் ஸ்டுடியோ பகுதிகளில் மட்டுமே அஜித்தை பார்க்க முடியும்.

இவர் சாதாரணமாக ஒரு இடத்திற்குவந்தாலே, அந்த இடம் திருவிழாவை போல் கூட்டம் கூடிவிடும். பக்கமாக, அஜித் அவர்கள் பாஸ்போர்ட் ஆபிசுக்கு வந்தபோது ரசிகர்கள் கூட்டம் அலை மோதியதால், அரசு அதிகாரிகள், அரசு வாகனத்திலேயே கூட்டிக் கொண்டு சென்று வீட்டில் விட்டது மறக்க முடியாத கதை.

இந்நிலையில் தல அஜித் அவர்கள், டப்பிங் செய்யக்கூட இனி வீட்டை விட்டு வெளிவர வேண்டிய அவசியமில்லை. காரணம், அஜித் அவர்கள் தனது வீட்டிலேயே சொந்தமாக டப்பிங் ஸ்டூடியோ ஒன்றை கட்டி வருவதாகவும், தற்போது அந்தப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அனேகமாக தல 60 படத்தின் டப்பிங் கூட தனது சொந்த ஸ்டுடியோவிலேயே இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக்கேட்ட தல அஜித்தின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

தல! ரசிகர்கள் மேல கொஞ்சம் கருணை காட்டுங்க தல..

Leave a Comment